E-paper   |   Sitemap   |   RSS
ஏப்ரல் 09,2010,00:00

உலகில் பழமையான மொழியின் தாயாக விளங்கும், உயர் தனிச்செம்மொழியான தமிழ், சங்க காலத்திற்கு முந்தைய தமிழ், சங்ககால தமிழ், இடைச்சங்க தமிழ், கடைச்சங்க தமிழ், மறுவிய தமிழ், தற்கால தமிழ் என்று படிப்படியாக பல வடிவங்களையும், பல ஓசைகளையும், அர்த்தங்களையும் கொண்டுள்ளது. இப்படி பல வகையான தமிழிற்கென்று தனியான பண்பாடு,கலாசாரம், நாகரீகம், வாழ்க்கை முறை இருந்தது. ஒரு மொழி என்றால் அதற்கென்று இலக்கணம், அதற்கு பின் இலக்கியம் உண்டு. இரண்டையும் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். வளர்ந்து வரும் தொழில் நுட்ப யுகத்தில், ஆங்கில மோகம் அதிகரித்து வருகிறது. சரளமான ஆங்கில வார்த்தைகளை பறக்கவிட்டு பார்வையாளர்களை தமிழ் பேச்சால் கட்டிப்போடுபவர்கள் பலர் உள்ளனர். ஆனாலும் இன்றளவும் நம் தமிழில் புலமை பெற்ற பலர் மடைதிறந்த வெள்ளம் போல பேசுபவர்கள் உள்ளனர். அதில் ஒலிக்கும் தமிழ் சொல்லிற்கு நிகராக எந்த மொழியும் போட்டியிட்டதில்லை என்று தமிழ் வரலாறு கூறுகிறது. இவ்வளவு பழமையும், செழுமையும் வாய்ந்த தமிழைப்பற்றி தமிழகத்திலுள்ள இளைய தலைமுறையினர் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக கோவை வ.உ.சி.,பூங்காவிலிருந்து அவிநாசிரோடு கொடிசியா அரங்கு வரை அவிநாசி ரோட்டின் இரு பகுதியிலும், தொன்மையான தமிழை பற்றியும், பண்பாடு, கலாசாரம் குறித்தும் பிளக்ஸ் போர்டுகளை மாநாட்டிற்கு சில தினங்களுக்கு முன்னதாக அமைத்து தமிழின் பெருமையை பறை சாற்ற வேண்டும். இதை பார்ப்பதன் மூலம் இளைய தலை முறையினருக்கு தமிழின் உன்னதம் தெரியும். இதை கருத்தில் கொண்டு அரசு முதற் கடமையாக இப்பணியை செய்ய வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »