E-paper   |   Sitemap   |   RSS
ஏப்ரல் 08,2010,00:00

கோவைக்கு எத்தனையோ பெருமைகள் இருந்தாலும், கோவை நகரை ஆளும் மாநகராட்சி மன்றத்திற்கு மிகப்பெரிய பெருமை உள்ளது. அது பழமை மாறாத விக்டோரியா ஹால். ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. கோவை நகராட்சியாக இருந்த போது நகர மன்றமானது, தற்போது மாநகர மன்றமாகியுள்ளது. கோவையின் அடையாள சின்னங்களில் இதுவும் ஒன்று. கோவை மாநகராட்சிக்கு பெருமை சேர்க்கும் வகையில், மாநகராட்சி தலைமை அலுவலகத்தை செம்மொழி மாநாடு நினைவாக அழகுபடுத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக 30 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வண்ண விளக்குகள், நீரூற்றுகள், படர்புல்வெளிகள், தொங்கும் தோரண விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிருவதற்கு ரிப்ளக்டிங் தொழில் நுட்பம் பயன்படுத்திய ஜொலிக்கும் பதிப்பான்கள், வாகனங்களை முறையாக பார்க்கிங் செய்வதற்கென்று தனித்தனி அமைப்புகள் ஏற்படுத்தப்படுகிறது. அலுவலகத்தின் வெளித்தோற்றத்திற்கு மட்டும் தான் அழகுபடுத்தமுடியுமா என்ன, அலுவலகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்படுகின்றன. மாநாட்டிற்கு வருகை தருவோரில் பலர், பழம் பெருமை வாய்ந்த மாநகராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தால், பழமையான கட்டடத்தில் கூட அனைத்து வசதிகளும் உள்ளதே என்று ஆச்சரியப்படவைப்பதற்காக இப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »