E-paper   |   Sitemap   |   RSS
ஏப்ரல் 07,2010,00:00

இந்து மதத்தில், தமிழ்க்கடவுள் என்று போற்றப்படும் முருகன் தமிழை வளர்த்ததாகவும், தமிழை போற்றி பாடிய புலவர்களுக்கு பரிசுகளை வழங்கியதாகவும், சமய நூல்களிலிருந்து தெரிய வருகிறது. முருகனுக்கு தமிழகத்தில் ஆறுபடை வீடுகள் உள்ளன. ஏழாவது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது கோவையிலுள்ள மருதமலை. அன்றாடம் ஏராளமான பக்தர்கள் வருகை தரும் மருதமலைக்கு, கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டையொட்டி மேலும் உட்கட்டமைப்பு வசதிகள் செய்து மெருகேற்றப்படுகிறது. செம்மொழி மாநாட்டிற்கு பல நாடுகளில் இருந்து வருகை தரும் ஏராளமான தமிழர்கள், மருதமலை சுப்ரமணிய சுவாமியை தரிசனம் செய்யாமல் செல்லப்போவதில்லை என்பது நிச்சயம். மாநாட்டிற்காக, மருதமலை கோவில் அடிவாரத்தில் அமைந்துள்ள மைதானம் நவீனமயமாக்கப்பட்ட பஸ் ஸ்டாண்டாக மாற்றப்படுகிறது. தார்சாலை, நவீன கழிப்பிடம், நவீன உணவகங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, நவீனகுப்பைதொட்டி அமைக்க ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தூய்மைப்பணியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் ராக் மற்றும் நேசம் அமைப்பை சேர்ந்தவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மருதமலை கோவிலில் இருந்து வடக்கு பக்கம் உள்ள பகுதியில் ஓய்வெடுக்க மண்டபம், குடிநீர் வசதி, கோவில் வடகிழக்கு பகுதியில் நடைபாதை கற்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டையொட்டி கோவை நகரே அழகுற மாற்றப்பட்டு வரும்போது, மருதமலை மட்டும் விடுபடுமா என்ன?



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »