E-paper   |   Sitemap   |   RSS
ஏப்ரல் 06,2010,00:00

எளிதாக பறந்து வர எளிமையானவிமான போக்குவரத்து ஏற்பாடுகள்உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு இரண்டு லட்சம் பேர் கோவைக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மொழி செம்மல்கள், அறிஞர்கள் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு தங்குமிடம், போக்குவரத்து போன்ற வசதிகளுக்காக இப்போதிருந்தே ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.உலகம் முழுவதிலும் இருந்து தமிழர்கள் பங்கேற்க வசதியாக சிறப்பு விமான போக்குவரத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியார் விமான போக்குவரத்து நிறுவனங்கள், இந்த விமானங்களை இயக்க தயாராகி வருகின்றன. சிங்கப்பூரிலிருந்து அதிகமானோர் வரும் வாய்ப்பு உள்ளதால், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானமான 'சில்க் ஏர்' நேரடி விமானத்தை இயக்க திட்டமிட்டு வருகிறது. மாநாடு நடக்கும் ஜூன் மாதத்தில், நான்கு விமானத்தை இயக்கவும் முடிவு செய்துள்ளது. இதற்கான அனுமதி கிடைத்தால், எளிதாக சிங்கப்பூரிலிருந்து, கோவைக்கு பறந்து வந்துவிட முடியும்.தமிழ் மக்கள் அதிகம் உள்ள இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், லண்டன், அமெரிக்கா போன்ற இடங்களில் இருந்தும் அதிகம்பேர் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளது. இதற்கென சிறப்பு விமானங்களை இயக்க முடியுமா என்பது பற்றியும் அரசு ஆலோசனை செய்து வருகிறது. சர்வதேச அளவில் இருந்து வரும் தமிழர்களுக்கு உரிய போக்குவரத்து வசதிகளை செய்ய, தனி குழுவே அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர், சர்வதேச அளவில் இருந்து வருவோர், கோவை நகரை எளிதாக அடைய உள்ள வாய்ப்புகள் குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர்.கோவை விமான நிலையத்திலும், விரிவாக்கப்பணியை விரைவாக முடிக்க இந்திய விமான ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »