E-paper   |   Sitemap   |   RSS
ஏப்ரல் 05,2010,00:00

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான ஏற்பாடு தீவிரமாக நடந்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து மாநாட்டுக்கு வரும் கட்டுரையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள், பார்வையாளர்களை ஏர்போர்ட், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டில் இருந்து அழைத்து சென்று, தங்க வைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஓட்டல்களில் தங்கும் விருந்தினர்களை கவனிக்க, தன்னார்வலர்களை பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விருந்தினர்கள் தங்கும் ஓட்டல்களில், தகவல் மையங்கள் அமைக்கப்படுகின்றன. இதில், குழுக்கள் பற்றி நன்கு தகவல் தெரிந்த தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.மாநாடு குறித்து தகவல் தெரிந்து கொள்ளவும், மாநாட்டு குழுவினரை எளிதாக தொடர்பு கொள்ளவும், இலவச தொலைபேசி வசதி செய்யப்படுகிறது. பொது சேவைக்காக தற்போது பயன்படுத்தும் மூன்று எண்கள் கொண்ட இலவச தொலைபேசி எண் போல மாநாட்டுக்காக தனியாக இலவச தொலைபேசி எண் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.அதற்காக தொலைபேசி தொடர்பு துறையுடன் ஆலோசித்து, விரைவில் முடிவு எடுக்கப்பட உள்ளது. செம்மொழி மாநாட்டுக்கான அழைப்பிதழ் எவ்வாறு அமைக்கப்பட வேண்டுமென முதல்வர் கருணாநிதி இறுதி செய்து விட்டார். மாநாட்டு அழைப்பிதழ்கள் மே மாதத்துக்குள் அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »