E-paper   |   Sitemap   |   RSS
ஏப்ரல் 04,2010,00:00

கோவையில் வரும் ஜூனில் நடக்கவுள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் பல ஆயிரம் வெளிநாட்டு சிறப்பு அழைப்பாளர்கள், பேராளர்கள், தமிழறிஞர்கள் பங்கேற்கவுள்ளனர். வி.ஐ.பி.,களுக்கான தங்குமிட பாதுகாப்பு, வழிக்காவல், மாநாடு அரங்க பாதுகாப்பு, விமான நிலையம், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் என 20க்கும் மேற்பட்ட முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ளவுள்ளனர். இதற்காக, 8,000 முதல் 10 ஆயிரம் போலீசார் தேவைப்படுவர் என்பதால், பிற மாவட்டங்களில் இருந்து 7,000 போலீசாரை கோவைக்கு வரவழைக்க திட்டமிட்டுள்ளனர். வெடிகுண்டு நிபுணர்கள், துப்பறியும் மோப்ப நாய் பிரிவினரும் அதிக அளவில் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்கான விரிவான பாதுகாப்பு திட்டங்களை இறுதி செய்வது தொடர்பாக, டி.ஜி.பி., மற்றும் கூடுதல் டி.ஜி.பி., தலைமையில் கூடிய வரைவில் அடுத்தடுத்து போலீஸ் உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. கோவை போலீசார், வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள தங்களை தயார்படுத்திக் கொண்டுள்ளனர். இலங்கை தமிழர் பிரச்னை, 'கள்' போராட்டம் தொடர்பாக, செம்மொழி மாநாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்படவும் வாய்ப்புள்ளதாக உளவுப் போலீசார் கணித்துள்ளனர். இதனால், பாதுகாப்பு பணிகளை விரிவான முறையில் மேற்கொள்ள கோவை மாநகர போலீசார் திட்டமிட்டுள்ளனர்.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »