E-paper   |   Sitemap   |   RSS
ஏப்ரல் 03,2010,00:00

உலகத்தரம் வாய்ந்த பொருட்களுக்கு, இணையான தரத்தில் கொங்கு மண்டலமான கோவையில் இன்ஜினியரிங், ஜவுளி, உருக்கு உள்ளிட்ட பல துறைகளில் நேர்த்தியாக பொருட்கள் வடிவமைக்கப்பட்டு உலக அளவில் நல்ல பெயர் பெற்ற பெருமை கொஞ்சு தமிழ் பேசும் கோவைக்கு உண்டு. அதில் வாகனங்களும் இடம் பெறாமல் போகவில்லை. இரு சக்கர வாகனம் அறிமுகமானபோது கோவை கணபதியில் உருவாக்கப்பட்ட மொபெட் தமிழகம் முழுக்க பிரபலமானது. கோவையில் நடைபெறும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் போது பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்த இது வரை 238 வாகனங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. மேலும் 567 வாகனங்கள் தேவைப்படும் என்று கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இது வரை பல மாவட்டங்களிலிருந்து செம்மொழி மாநாட்டிற்கு வரும் கலைக் குழுக்களுக்காக பத்து பேர் முதல், முப்பது மற்றும் ஐம்பது பேர் வரை பயணம் செய்யும் வகையில் 238 வாகனங்களை கோவை சரக போக்குவரத்துத் துறையினர் தயார் செய்துள்ளனர். ஒவ்வொரு வாகனத்தின் மாடல், அதன் நிலை, நிறம், என்ன வாகனம், உரிமையாளர் யார், அவரது முகவரி, எத்தனை பேர் அமர்ந்து செல்லலாம் என்பது குறித்த தகவல்களை திரட்டி ஒரு பதிவேடு தயார் செய்துள்ளனர். அதோடு கம்ப்யூட்டர் பதிவில் இடம் பெற்றுள்ளது. இதற்காக கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களிலிருந்து வாகனங்கள் சேகரம் செய்யப்பட்டுள்ளது. வாகனங்களின் உரிமையாளர், மொபைல் எண்கள், வாகனத்தின் மாடல் குறித்த அனைத்து விபரங்களும் பெறப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களது வாகன தேவை குறித்து ஏப்ரல் 15 ம் தேதிக்குள் தெரியப்படுத்த அனைத்து குழுக்களுக்கும், பங்கேற்பாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »