E-paper   |   Sitemap   |   RSS
மார்ச் 31,2010,00:00

செம்மொழி என்ற சிறப்பைப் பெறுவதற்கே, நீண்ட நெடிய போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. பெற்ற வெற்றியைக்கொண்டாடும் விழாவாக, கோவை உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு அமையப் போகிறது. அடுத்த ஓட்டம், ஆறு கோடி மக்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்துள்ள தமிழ் மொழியை, தேசத்தின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக மாற்றும் இலக்கை நோக்கியது. அதற்கான வேகத்தை அடுத்த தலைமுறைக்கும் தருகிற அச்சார விழாவாகவும் இந்த மாநாடு அமையும். தமிழ் என்ற வார்த்தையையே அந்நியமாகப் பார்க்க ஆரம்பித்திருக்கிற இன்றைய இளைய வட்டத்துக்கு, தாய்மொழியின் பெருமையை ஆழமாக உணர்த்துகிற விழாவாகவும் இது அமைய வேண்டுமென்பது தமிழ் நேசர்களின் தாகமாக இருக்கிறது.ஆய்வரங்கங்களுக்கு 55 தலைப்புகள் தரப்பட்டுள்ளன; இதில் பங்கேற்க, ஏராளமான தமிழறிஞர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். ஓய்வு பெற்றவர்களெல்லாம் சேர்ந்து தமிழை ஆய்வு செய்து விட்டுப் போய் விட்டால், இந்த மாநாட்டால் இளைய தமிழர்களுக்கு கிடைக்கப்போகும் பயன் என்ன என்ற கேள்வி எழுகிறது.செம்மொழி மாநாட்டின் முக்கிய நிகழ்வுகளான ஆய்வரங்கம், கண்காட்சி, ஊர்வலம் என எல்லாவற்றிலும் இளம் படைப்பாளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டியது அவசியம். அதெல்லாம் 'பெரியவர்கள் கூடும் இடம்' என்று அவர்கள் ஒதுங்கி விடக்கூடும். அவர்களையும் அழைத்து வந்து, மூத்த தமிழுக்கு இள ரத்தம் பாய்ச்சுகிற வேலையையும் இந்த மாநாடு செம்மையாகச் செய்து முடித்தால் இன்னும் மகிழலாம்.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »