E-paper   |   Sitemap   |   RSS
மார்ச் 30,2010,00:00

ஒன்றிரண்டில்லை; 50 அலங்கார வாகனங்கள் வலம் வர இருக்கின்றன. நூறு 200 பேரில்லை; 3,000 கலைஞர்கள், கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தவுள்ளனர். ஆக மொத்தத்தில், ஆரம்பநாளிலேயே அமர்க்களப்படுத்தப் போகிறது கோவை உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு ஊர்வலம்.தமிழின் சுவையால் செவிக்கு விருந்து படைக்கவிருக்கும் செம்மொழி மாநாட்டில், பார்வைக்கு விருந்தாக நடக்கப்போகிறது இந்த ஊர்வலம். மொத்தம் 50 அலங்கார வாகனங்களில் இடம் பெறப்போகும் அமைப்புகளின் வரைபடங்களைப் பார்த்து முதல்வர் கருணாநிதி ஒப்புதலும் வழங்கி விட்டார்.ஏப்ரல் இறுதி வாரத்தில் அல்லது மே முதல் வாரத்தில் கோவை வ.உ.சி., பூங்காவில் அலங்கார வாகனங்கள் அமைக்கும் பணி துவங்கி விடும். அதுவே, கோவை மக்களுக்கு சிறந்த பொழுது போக்காக இருக்கும். பூங்காவிலிருந்து மாநாட்டுப் பந்தல் வரை, ஒன்பது கி.மீ., தூரத்துக்கு ஊர்வலம் ஊர்ந்து வரும்.வாகனங்களின் முன்னே, இயல், இசை, நாட்டியக் கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வருவர். சாலையின் இரு புறமும் இருந்தவாறு பொது மக்கள் இந்த ஊர்வலத்தை ரசிக்கலாம். ஜனாதிபதி, முதல்வர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பார்வையிட ஐந்து இடங்களில் மேடை அமைக்கப்படும்.மாநாட்டின் முதல் நாளில் ஊர்வலம் தான் முக்கிய நிகழ்வு. கிடைத்தற்கரிய இந்த ஊர்வலக்காட்சியை பார்க்க முடியாதவர்களுக்காக, அலங்கார வாகனங்கள் அனைத்தும், கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் மாநாட்டின் இறுதி நாள் வரை நிறுத்தப்படும். கண்டும் ரசிக்கலாம்; காமிராவிலும் 'சுட்டு'க் கொள்ளலாம்.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »