E-paper   |   Sitemap   |   RSS
மார்ச் 29,2010,00:00

தமிழுக்கு இன்று விழா எடுக்கும் இந்த கொங்கு மண்ணில், தமிழுக்கு தங்கள் படைப்புகளால் அணி செய்த இலக்கியப் புலவர்கள் ஏராளமானோர் வாழ்ந்துள்ளனர். இவர்களிலும் பலர், பன்மொழிப் புலவர்களாக இருந்தார்கள் என்பது சிறப்புச் செய்தி. ஆனாலும், கொங்குத் தமிழில் ஆன்மிக இலக்கியம் புனைந்து, ஆண்டவனுக்கு தமிழால் அலங்காரம் செய்தவர்கள் பலர்.மொழி தோன்றிய காலத்திலேயே, ஐந்திணை மரபில் கலாச்சாரம் கண்ட தமிழன், தன் மொழியோடு சமயத்தையும் இணைத்து வைத்திருந்தான் என்பது வரலாறு. தொல்காப்பியத்திலும், வள்ளுவத்திலும் சமயம் என்பது நிந்தனையில்லை; ஆனால், கடவுள் வாழ்த்து உண்டு; நம்பிக்கையும் உண்டு.பெரிய புராணம், நாலாயிர திவ்ய பிரபந்தம், தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி என ஆன்மிக மணத்தோடு தமிழ் வளர்த்த இலக்கியங்களின் பட்டியல் வெகுநீளம். சங்க காலம் தொட்டு இன்று வரை இருக்கும் தமிழை மேன்மைப்படுத்திய படைப்பாளிகளின் வரிசையில் திருஞானசம்பந்தரையும், கம்பரையும் ஒதுக்கி விட முடியாது;ஆன்மிகப் புலவர்கள் என்று இவர்களைப் புறக்கணித்தால், தமிழனின் உண்மையான விலாசத்தை அறிய முடியாது. தெய்வநம்பிக்கை என்பது வேறு; தமிழ் இலக்கியச்சுவை என்பது வேறு. நுனிச்சொட்டும் தமிழ் இன்பத்தை சமய அடையாளங்கள் காட்டி, செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கங்களில் ஒதுக்கி விடக்கூடாது என்பதே தமிழ்ச் சமய இலக்கியத்தை நேசிக்கும் தமிழறிஞர்களின் ஆத்மார்த்தமான வேண்டுகோள்.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »