E-paper   |   Sitemap   |   RSS
மார்ச் 28,2010,00:00

செம்மொழி மாநாட்டுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கிற இலச்சினை, மேலோட்டமாகப் பார்க்க, வானுயர்ந்த வள்ளுவர் சிலையை மட்டும் கொண்டிருப்பதாகத் தோன்றும். அதற்குள்ளே மறைந்து கிடப்பது தமிழின் பெருமை; தமிழர் நாகரீகத்தின் அருமை.கன்யாகுமரியில் கம்பீரமாய் நிற்கும் வள்ளுவர் சிலை; அதன் பின்னே ஆர்ப்பரிக்கும் அலை. பூமி பிளந்து, பீறிட்டுக் கிளம்பிய சுனாமியைக் குறிக்கிற காட்சி அது. அத்தனை சீற்றத்திலும் அயராமல் நின்ற வள்ளுவன் சிலை, பல தடைகளைத் தாண்டி வாழும் தமிழைச் சுட்டிக் காட்டுகிறது.அதன் கீழே, ஓலைச்சுவடியில் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று எழுதியிருப்பது, முதல்வர் கருணாநிதியின் பேனா முனை. வட்டத்தின் மேலே ஏழு குறீயீடுகள் இருக்கின்றன. சிந்துவெளி அகழ்வாராய்ச்சியில், மொகஞ்சதாரோ, ஹரப்பாவில் திராவிட நாகரீகமாய்க் கிடைத்த 7 குறியீடுகள் அவை.திரைகடலோடி திரவியம் தேடியதைச் சொல்கிறது படகு. தமிழரின் வேளாண் வாழ்வு முறையை விளக்குகிறது காளை. தமிழர்களின் வழிபாட்டு முறையை, கணக்கீட்டு முறையை விவரிக்கின்றன மற்ற குறியீடுகள். ஏழு என்ற எண்ணின் மீது தமிழர்களுக்கு இருக்கும் நம்பிக்கையையும் அது வெளிப்படுத்துகிறது. சுருங்கச்சொன்னால் அது இலச்சினை மட்டுமல்ல; தமிழுக்கான அர்ச்சனை.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »