E-paper   |   Sitemap   |   RSS
மார்ச் 27,2010,00:00

முகப்பு அரங்கம், தனிப்பொழிவரங்கம், கலந்துரையரங்கம், அமர்வரங்கம் என செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கங்களில் தமிழ் ததும்பி வழியப் போகிறது. ஒவ்வோர் அரங்கத்திற்கும் தரப்பட்ட தலைப்புகளே, அதன் சுவையையும், சூடு பறக்கும் விவாதத்தையும் நம் கற்பனைக் காதுகளில் ஒலிக்க விடுகின்றன. தற்கால உலகில்...தமிழ் இலக்கியம், தொல்காப்பியம், திருக்குறள் என 3 தலைப்புகளில் நடக்கிறது முகப்பரங்கம். சங்ககால அரசியலில் புலவர்கள், சங்க கால வாழ்வியல், தலித் இலக்கியம், பெண்ணியம், ஆட்சித் தமிழ் என ஐந்து விதமாய் தமிழை அலசப்போகிறது தனிப்பொழிவரங்கம்.தமிழ் வழிக்கல்வி, எழுத்துச் சீர்திருத்தம், உலகமயமாதல் சூழலில் தமிழ், மாறிய பாலியம், காலத்திற்கேற்ற தமிழ் மேம்பாடு, உலக நாடுகளில் தமிழும், தமிழரும், அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வுகளும் தமிழ்மொழி இலக்கிய காலக் கணிப்புகளும், இந்தியப் பண்பாட்டிற்கு தமிழகத்தின் பங்களிப்பு என எட்டுத்தலைப்புகளில் கட்டுப்பாடின்றி விவாதிக்கிறது கலந்துரையரங்கம்.தமிழும் உலகச் செம்மொழிகளும், தமிழ் இலக்கியம், இலக்கணம், மரபு வழிக்கலைகள், நாட்டுப்புற இலக்கியம், தொல்லியல், நாணயவியல், தமிழ்ப்பழங்குடி மொழிகள், கலைச்சொல்லாக்கம், ஆவணப்படங்கள், சூழலியலும் தமிழும் என 55 தலைப்புகளில் விவாதிக்கிறது அமர்வரங்கம்.ஆய்வரங்கங்களில், 216 அயல் நாட்டு தமிழறிஞர்கள் பங்கேற்று தங்களது கட்டுரைகளை வாசிக்கவுள்ளனர்; இவர்களைத் தவிர்த்து, 342 ஆர்வலர்களும் இதில் பங்கேற்க பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். தமிழ் எப்படியெல்லாம் உச்சரிக்கப்படுகிறது என்பதை ஒரே இடத்தில் ரசிக்க ஒரு வாய்ப்பு.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »