E-paper   |   Sitemap   |   RSS
மார்ச் 26,2010,00:00

தமிழை முழுவதுமாய்ச் சுவைத்து உணர்ந்தவர்கள் யாரும் இருக்க முடியாது. செம்மொழியாய் கம்பீரம் பெற்றிருக்கும் தமிழின் இனிமையை, மென்மையை, வலிமையை ஐந்து நாட்களுக்கும் அறுசுவையாய் சுடச்சுட விருந்து படைக்க காத்திருக்கிறது கோவை உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு. மாநாட்டில் எத்தனையோ நிகழ்ச்சிகள் இருந்தாலும், தமிழறிஞர்களும், தமிழ் ஆராய்ச்சியாளர்களும், தமிழ்க் கவிஞர்களும், வித்தகர்களும் விவாதிக்க இருக்கும் ஆய்வரங்கங்கள்தான், செம்மொழி மாநாட்டின் சிறப்பம்சம். இதற்காக கொடிசியா வளாகத்தில் தயாராகின்றன 30 உள்ளரங்கங்கள். இவற்றில் 5,000 பேர், 2,000 பேர் அமரும் வகையில் 2 பிரமாண்ட உள்ளரங்கம் விரைவில் அமைக்கப்படவுள்ளது. அவற்றைத் தவிர்த்து, 500 பேர், 200 பேர், 100 பேர் பங்கேற்கக்கூடிய 28 உள்ளரங்கங்கள் தயார் செய்யப்படவுள்ளன. சுற்றிலும் மரத்தால் அடைக்கப்பட்டு, முற்றிலும் குளிர் சாதன வசதி செய்யப்படுகிறது. ஓர் ஆய்வரங்கத்தில் நடக்கும் விவாதம், வெளியில் கேட்காத வகையில் துல்லியமாக, நவீன முறையில் ஒலி அமைப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தமிழறிஞர்களைத் தங்க வைப்பதற்கு அறைகளும் தயாராகி விட்டன. இவர்களை அழைத்துச் செல்ல 50 சொகுசு (வால்வோ) பஸ்களும் தயார். தனித்தனி வாகனங்களில் அழைத்து வந்தால் பல நூறு வாகனங்கள் தேவை என்பதோடு, தேவையற்ற நெரிசலைத் தவிர்க்க வேண்டுமெனில் இதுவே சிறந்தது என்று அரசு முடிவு செய்துள்ளது. சுவையான தமிழ் கேட்க, சுகமான பயணம்.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »