E-paper   |   Sitemap   |   RSS
மார்ச் 24,2010,00:00

மிதமான தட்ப வெப்ப நிலை, இதமான மேற்குத் தொடர்ச்சி மலைச்சாரல், சுவையான சிறுவாணி தண்ணீர், மரியாதைக்குரிய கொங்குத் தமிழ்...கோவை நகருக்கு ஏற்கனவே இருக்கும் இந்த பெருமைகளுடன் புதிய பெருமையும் சேரப்போகிறது; அதுதான், உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு. கோவை நகரில் இந்த மாநாடு நடப்பது மட்டுமல்ல; இதற்காக நடக்கும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளும், இந்நகருக்கு மேலும் பெருமை சேர்ப்பது நிச்சயம். மற்றெல்லாவற்றையும் விட, இந்த நகரில் உருவாகப்போகும் புதிய பூங்காக்கள்தான், செம்மொழி மாநாட்டால் நிகழும் சுகமான திருப்பம். ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட பொது ஒதுக்கீட்டு இடங்களில், செம்மொழி மாநாட்டுக்காக 47 பூங்காக்களை உருவாக்கும் பணியில் இறங்கியுள்ளது கோவை மாநகராட்சி நிர்வாகம். பசும்புல்வெளி, செயற்கை நீரூற்று, அலங்கார மலர்ச்செடிகளுடன் புதிய பூங்காக்கள் பிரசவமாகின்றன. சாலையோர பூங்காக்களைப் போல, நடைபாதை பூங்காக்களும் உருவாகி வருகின்றன. அரசுத்துறைகள், தன்னார்வ நிறுவனங்கள் சார்பில் மரங்கள் வளர்ப்பதற்கான முயற்சிகளும் துவங்கியுள்ளன. விரைவில், கோவை நகரமே பெங்களூருவைப் போல 'பூங்கா நகரம்' என்ற பெயரைப் பெறப்போகிறது. அதற்கு பந்தக்கால் நட்ட பெருமை, செம்மொழி மாநாட்டையே சேரும். மாநாட்டுக்கு வரும்போது, இதையெல்லாம் நீங்களும் ரசிக்கத்தானே போகிறீர்கள்...?


மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »