E-paper   |   Sitemap   |   RSS
மார்ச் 23,2010,00:00

செம்மொழி மாநாடு நடக்கும் கோவைக்கு ஒரு நிரந்தரப் பெருமை இருக்கிறது. பழம் பெருமை வாய்ந்த தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இருப்பது இங்கே தான். விதவிதமான மரங்களும், வித்தியாசமான செடி, கொடிகளும், வசீகரிக்கும் வயல் வெளியும்...அதற்கு நடுவே செக்கச்சிவந்த நிறத்தில் கம்பீரமாய் நிற்கும் அந்த பல்கலை கட்டடமும், பார்க்கப் பார்க்க அழகு.இந்த பல்கலைக்கழகம்தான், செம்மொழி மாநாட்டுக்கு முதல் முதலாய் மலர்க்கம்பளம் விரித்து, வரவேற்புரை வாசித்தது. ஜனவரி 9, 10 ஆகிய இரு நாட்களில் வேளாண் பல்கலை சார்பில், பிரமாண்ட மலர் கண்காட்சி, கோவையில் நடத்தப்பட்டது. ரோஜா, கார்னேசன், ஜெர்பரா, ஆந்தூரியம், ஆர்கிட் என 20 வகையான கொய் மலர்களும், 200க்கும் மேற்பட்ட ரகங்களுமாக பல லட்சம் மலர்கள், அந்த கண்காட்சியில் மக்களை பரவசப்படுத்தின.மலர்க்கோலம், மலர்க்குன்று, மலர்ப்பந்தல், உலர் மலர் அலங்காரம், வண்ண இலைகளில் அலங்காரக் கூடம், போன்சாய் மலர்களின் அணி வகுப்பு, மலர் விமானம், காய்கறிச் சிற்பங்கள் என காண்போர் இதயங்களை வண்ணங்களாலும், வாசத்தாலும் வென்றது அக்கண்காட்சி.தமிழைப்பருக வரும் மக்களை மகிழ்விக்க, மீண்டும் தயாராகிறது கோவை வேளாண் பல்கலைக்கழகம். செம்மொழி மாநாட்டுக்கு வருவோரை மகிழ்விக்க, தாவரவியல் பூங்காவை அமர்க்களமாக தயார் செய்து கொண்டிருக்கிறது பல்கலை நிர்வாகம். அதே நாட்களில் மீண்டும் ஓர் அசத்தல் மலர் கண்காட்சி நடத்தவும், அரசு ஆலோசித்து வருகிறது. எனவே, மாநாட்டுக்கு கோவை வருபவர்களுக்கு இயற்கையின் அதிசயங்களைத் தரிசிக்கும் வாய்ப்பும் இலவசம்.


மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »