E-paper   |   Sitemap   |   RSS
ஜூன் 23,2010,00:00

உலகத் தமிழர்களை உணர்வால் ஒன்றிணைக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, இன்று அமர்க்களமாய் துவங்குகிறது. தமிழே பேசத் தெரியாத தமிழர்களும், தமிழை நேசிக்கும் தமிழரல்லாதவர்களும் இந்த மாநாட்டு நிகழ்வுகளில் மகிழ்வோடு பங்கேற்க உலகம் முழுவதிலிருந்தும் வந்து குவிந்துள்ளனர். தமிழின் பழம்பெருமையை, தமிழுக்குக் கிடைத்த புதிய தகுதியைக் கொண்டாடும் இந்த அருமையான வேளையில், தமிழ் மொழியை பல தளங்களில் வளர்ப்பதற்கான பல நல்ல ஆலோசனைகளையும் வழங்கவிருக்கின்றனர் தமிழ் அறிஞர்களும், ஆய்வாளர்களும்.இதே அரங்கில் பல சர்ச்சைகளும் தலை தூக்கும். அத்தகைய அர்த்தமுள்ள விவாதங்களே தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும். சமஸ்கிருத இலக்கியங்களிலிருந்தே, தொல்காப்பிய பொருளதிகாரத்தின் உவமை கூட எடுக்கப்பட்டிருப்பதாக கொளுத்திப்போட்டிருக்கிறார் அமெரிக்க மொழி வல்லுனர் ஹெர்மன் டிக்கன்; அதை மறுத்திருக்கிறார் மற்றொரு மொழி வல்லுனர் ஜார்ஜ் ஹார்டு.குளிரூட்டப்பட்ட ஆய்வரங்கத்துக்குள் எதிரும், புதிருமாக இப்படிப் பல ஏவுகணைகள் பாயும். இந்த ஆய்வரங்கங்களில், விவாதிக்கப்பட்ட செய்திகள், வெறும் குறுந்தகடுகளுக்குள் குறுகிப்போய்விடக்கூடாது. வெளியிலே விடப்பட்டு, விமர்சனங்களுக்கு உட்படுத்தவேண்டும். இணையதள மாநாட்டின் அமர்வரங்களில் ஆய்வுக்குள்ளான விபரங்கள், பகிரங்கமாய் பரப்பப்பட வேண்டும். தமிழை வளர்க்க அறிஞர்கள் கூறும் ஆலோசனைகள், அடுத்த கட்ட நடவடிக்கைக்குப் போக வேண்டும்.மாநாட்டுப் பந்தல் அலங்காரமும், கழற்றி எடுக்கப்படவுள்ள கண்காட்சி அரங்கமும், எல்லோரும் எதிர்நோக்கும் எழிலார் பவனியும், பட்டி மன்றமும் மட்டுமே தமிழை வளர்த்து விடாது.
தமிழ் வாழட்டும்! தமிழினம் அகிலத்தையே ஆளட்டும்!
 செம்மொழி மாநாடு சிறக்க, 'தினமலர்' நாளிதழின் சீர்மிகு வாழ்த்துக்கள்.


மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »