E-paper   |   Sitemap   |   RSS
ஜூன் 22,2010,00:00

கோவையில் உலக தமிழ் செம்மொழி மாநாடு பற்றிய அறிவிப்பு வெளியானவுடனே ஒவ்வொருவரையும் உற்சாகம் தொற்றிக் கொண்டது. அதற்கேற்ப நகருக்கு புதுப்பொலிவு கொடுத்து ஜொலிக்க வைத்து அழகு பார்க்கிறது அரசு. தமிழின் பெருமையை, வரலாற்றை, கலாச்சாரத்தை, பண்பாட்டை, ஒற்றுமையை உலகுக்கே எடுத்துச் சொல்லும் இந்த கொண்டாட்டத்தில், ஒவ்வொருவரும் 'தமிழர்' என்ற அடையாளத்துடன் பெருமிதத்துடன் தங்கள் பங்களிப்பை செலுத்த வேண்டிய நேரமிது. இதுவரை நடந்த விழாக்கள் போகட்டும். இது தமிழர் பெருவிழா. இந்த நாட்களிலாவது உடலை இறுக்கும் பனியன், ஜீன்ஸ் பேன்ட்ஸ், சுடிதார் ஆடைகளுக்கு விடை கொடுப்போம். தமிழர் கலாச்சாரத்தின் தனி அடையாளமான வெள்ளை வேட்டி சட்டை,சேலை சரசரக்க மாநாட்டு பந்தலில் அணிவகுப்போம். நம் பாரம்பரிய தொழிலான கைத்தறித் தொழிலுக்கு கைகொடுத்து நெசவாளர்களின் வாழ்வில் விளக்கேற்றுவோம். அதே நேரத்தில் செம்மொழி மாநாடு இந்தளவு சிறப்பாக நடைபெற இரவும் பகலும் பாடுபட்ட தொழிலாளிகள், அலுவலர்கள், அதிகாரிகள், அமைச்சர்கள் ஒவ்வொருவரின் வியர்வையும் கோவை மண்ணில் கலந்துள்ளதை மறக்காமல், அவர்களின் நினைவாகவேனும் புதிய வசதிகளை தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.


மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »