E-paper   |   Sitemap   |   RSS
ஜூன் 21,2010,00:00

நாட்கள் ஓடி விட்டன; 48 மணி நேரம் மட்டுமே பாக்கி. நாளை மறுநாள் துவங்கும் செம்மொழித் திருவிழா கொண்டாட்டத்துக்கு தயாராகி விட்டது கோவை. மாநாடு சிறப்பாக நடக்க வேண்டுமென்று கோவில்களில் அர்ச்சனை நடக்கிறது; தேவாலயங்களில், சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.தாமரை இலைத் தண்ணீர் போல, மாநாட்டோடு ஒட்டாமல் இருந்தவர்களையும் நேற்று துவங்கிய 'செம்மொழிக் கலைவிழா' உணர்வோடு வந்து ஒட்டிக் கொள்ளச் செய்து விட்டது. இன்று முதல்வர் வருகிறார்; வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்தெல்லாம் அணி அணியாய் தமிழர்கள் நாளை திரள்வர்.கொங்கு மண்டலமே பொங்குகிற உற்சாகத்தோடு, தமிழ் மாநாட்டில் பங்கேற்க தவிப்போடு காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், 'எங்களுக்கும், இதற்கும் தொடர்பே இல்லை' என்பதைப் போல, மாநாட்டுக்கு விடுமுறை தர மறுத்து, தங்களை வெளிப்படுத்துகின்றனர் பலர். விசைத்தறித் தொழிலாளர், 'விடுமுறை கிடைக்குமா' என ஏங்குகின்றனர். 'வங்கிகளுக்கு விடுமுறை உண்டா' என்பதும், இன்னும் தெளிவாகவில்லை.மாநாட்டு நாட்களில் எல்லாவற்றையும் மூட வேண்டுமென்று அவசியமில்லை. அப்படி மூடினால், இங்கே வருவோருக்கும் திண்டாட்டமாகி விடும். நேரடியாக மக்களுக்கு சேவை செய்யும் நிறுவனங்களைத் தவிர, மற்ற நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்தால் தான் மாநாட்டில் மக்களும் பங்கேற்க முடியும். இதற்கெல்லாம் அரசு உத்தரவு தேவையில்லை; தமிழ் உணர்வு இருந்தாலே போதும்.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »