E-paper   |   Sitemap   |   RSS
ஜூன் 20,2010,00:00

செம்மொழியாய்ச் சிறப்புப்பெற்ற தமிழுக்கு அரசே மாநாடு எடுக்கும் இந்த வேளையில், இந்த மாநாட்டைப் பற்றியும், தமிழ் வளர்ப்புக்கான வழிகள் குறித்தும் அலை அலையாய் ஆலோசனைகள் வந்து கொண்டிருக்கின்றன. சில கருத்துகள், அரசை அதிர வைக்கின்றன; சில, ஆராய வைக்கின்றன.மாநாடு நடக்கும்போதே எல்லாக்கோரிக்கைகளையும் ஒட்டு மொத்தமாய் ஏற்றுக் கொண்டு அரசாணை வெளியிட்டு விட முடியாது. ஆனால், அரசு இந்தக் கருத்துகளை எல்லாம் பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம். அதிலுள்ள நிறை, குறைகளை அறிந்து, விவாதங்கள், விமர்சனங்களின்றி அவற்றை நிறைவேற்ற வேண்டும்.அவசர கதியில், அரை குறையாக, அரசியல் நோக்கோடு வெளியிடப்படும் அரசாணைகளால் எந்தப் பிரச்னைக்கும் எப்போதுமே தீர்வு கிடைக்காது. தமிழ் மாநாடு நடக்கும் இந்தச் சூழலில், தமிழாசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குனரால் சில செயல்முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஆனால், தமிழை விரும்பிப் படித்து, தமிழாசிரியராக பணியாற்ற நினைத்து, அதற்கு வாய்ப்பில்லாமல் இருக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை ஏராளம். தமிழில் இளங்கலை, முதுகலை, பி.எட்., எம்.எட், முடித்தவர்கள், எந்த வித ஊக்க ஊதிய உயர்வும் இன்றி, தமிழாசிரியராக முடியாது தவிக்கும் இடைநிலை ஆசிரியர்கள் பலர்.ஆசிரியராக பணியாற்றும் தமிழ்ப்பட்டதாரிகளைக் கணக்கிட்டு, அவர்களுக்கு பதவி உயர்விலும், ஊக்க ஊதிய உயர்விலும் சிறப்பு முன்னுரிமை அளிக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் தமிழ் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது ஓர் உதாரணம் மட்டுமே. தமிழ் கற்றோருக்கு சென்றவிடமெல்லால் சிறப்பு என்ற நிலையை உருவாக்குவது, முதல்வரின் கையில்தான் உள்ளது.


மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »