E-paper   |   Sitemap   |   RSS
ஜூன் 19,2010,00:00

செம்மொழி மாநாட்டை சிறப்பாக நடத்த ஓய்வு, உறக்கமின்றி உழைத்தவர் கோவை மாவட்ட ஆட்சியர் உமாநாத். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், செயலர்கள், குழு நிர்வாகிகள் வந்தபோதெல்லாம் கூடவே வந்து சலிக்காமல், அலுக்காமல் விளக்கம் கூறியதோடு பலன் எதிர்பார்க்காமல் பணியும் ஆற்றியவர். அவரோடு இணைந்து கண்ணயராமல் கடமையாற்றிய அலுவலர்களும் ஏராளம். எல்லோரது 10 மாத உழைப்புக்கும் பலன் கிடைக்கிற நேரம். உற்சாகத்தில் மிதக்க வேண்டிய நேரத்தில் ஓரமாய் கிளம்பியிருக்கிறது ஓர் அச்சம். மாநாட்டுக்கு மக்கள் கூட்டம் வருமோ, வராதோ என்று. காரணம், கோவையில் பரவிக் கிடக்கும் யூகங்கள்.நுழைவுச் சீட்டு இருந்தால்தான், செம்மொழி மாநாட்டு நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும், கண்காட்சி அரங்கில் காலடி வைக்க முடியும் என்று ஆளுக்கு ஆள் வதந்திகளை 'ரெக்கை' கட்டிப் பறக்க விட, அது பறந்து மக்களை பயமுறுத்துகிறது. அதற்கு ஒரு காரணமும் உண்டு.பாதுகாப்பு என்ற பெயரில், அவிநாசி சாலையிலிருந்து கொடிசியா சாலைக்கு உள்ளேயே யாரையும் விடாமல் துரத்துகிறது காவல்துறை. இப்போதே இப்படி என்றால் குடியரசுத் தலைவரும், முதல்வரும் வரும்போது, அவிநாசி சாலையில் வந்தாலே அடி விழுமோ என்று எல்லோருக்கும் ஐயம் கிளம்பியிருக்கிறது.மாநாட்டு நிகழ்ச்சிகள், கண்காட்சிக் கூடம், இணைய தள கண்காட்சி, புத்தகக் கண்காட்சி என எதைப் பார்க்கவும் அடையாள அட்டை தேவையில்லை, எல்லோரும் வாருங்களென்று அழைப்பு விடுத்திருக்கிறார் ஆட்சியர். அறிவிப்பு வெளியிட்டால் போதாது; தேவையற்ற கெடுபிடிகளை இப்போதே அகற்ற வேண்டும்.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »