E-paper   |   Sitemap   |   RSS
ஜூன் 18,2010,00:00

குதூகலம் கொப்பளித்துக் கிடக்கிறது கோவை. திருவிழா கொண்டாடும் ஒரு கிராமத்தின் உற்சாகத்தோடு, ஊரே புதுக்கோலம் பூண்டு செம்மொழி மாநாட்டை வரவேற்கத் தயாராகி விட்டது. எல்லோரும் திரண்டு வரச் சொல்லி, அழைப்பு விடுத்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி.ஏற்கனவே, கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்தாகி விட்டது. மாநாட்டுக்கு வரும் அரசு அலுவலர்கள் சிறப்பு விடுப்பு எடுக்கவும் வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது. எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் கூடுவார்களா, விடுமுறை கிடைத்ததென்று வேறு எங்காவது புறப்பட்டுப் போய் விடுவார்களா என்பதற்கு இப்போது விடை தெரியாது.அரசியலுக்கு அப்பாற்பட்டு, இந்த மாநாட்டில் தமிழர்கள் என்ற உணர்வோடு எல்லோரும் பங்கேற்க வேண்டுமென்பதுதான் முதல்வரின் எதிர்பார்ப்பு. தன் புகழ் பாடுவதற்காக இந்த மாநாடு இல்லை என்பதையும் வெளிப்படுத்தி விட்டார். இதற்கும் மேலே என்ன உத்தரவாதத்தை தமிழர்கள் எதிர்பார்ப்பார்களோ தெரியவில்லை.அரசின் மீது ஆயிரம் வருத்தம் இருக்கலாம், கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், மாநாடு நடத்தும் நோக்கம் குறித்தும் விமர்சனங்கள் இருக்கலாம்...எதுவாக இருந்தாலும் அதிருப்தியை வெளிப்படுத்த வேண்டிய சந்தர்ப்பம் இதுவல்ல. தமிழைக் காப்பதில் தமிழர்களுக்கு இருக்கும் அக்கறையை காட்ட வேண்டிய தருணம் இது.தமிழுக்கு செம்மொழித் தகுதியை வழங்க வேண்டுமென்று கோரியது தமிழர் அனைவரின் உரிமை என்றால், கொங்கு மண்ணில் சங்கத் தமிழுக்கு தங்க மகுடம் சூட்டும் இந்த விழாவில் பங்கேற்க வேண்டியது தமிழர்களின் கடமை.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »