E-paper   |   Sitemap   |   RSS
தமிழ் வளர்த்த அறிஞர்கள்...சுவாமி ஞானப்பிரகாசர்
ஜூன் 18,2010,00:00

தமிழ் வேர்ச் சொல் ஆராய்ச்சியை முதன் முதலில் துவங்கி அன்னைத் தமிழின் சிறப்புகளை அகிலம் உணர வழிகாட்டியவர் யாழ்ப்பாணம் சுவாமி ஞானப்பிரகாசர் (1857 - 1947). 'எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே' என்பது தொல்காப்பியம். ஒரு பொருளுக்கு ஒரு பெயர் இடப்பட்டுள்ளதெனில் அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். இதைக் கண்டறிந்து வெளிப்படுத்துவதே வேர்ச்சொல் ஆராய்ச்சி எனப்படும். இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள பரிசுத்த மார்டின் குரு மடத்தில் சேர்ந்து மதபோதகராவதற்குப் பயிற்சி பெற்று 1901ம் ஆண்டு குரு பட்டம் பெற்றார். ஞானப்பிரகாசர் அவர்கள் தமிழரின் பூர்வ சரித்திரமும் சமயமும், கத்தோலிக்கச் திருச்சபையும் அதன் போதகங்களும் ஆகிய தமிழ் நூல்களையும், யாழ்ப்பாண அரசர், பண்டைய இந்திய சரிதையும் ஆண்டு வரிசையும், தமிழரின் சாதி உற்பத்தி ஆகிய ஆங்கில நூல்களையும் எழுதியுள்ளார்.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »