E-paper   |   Sitemap   |   RSS
ஜூன் 17,2010,00:00

ஜனாதிபதி வருகிறார், நிதியமைச்சர் வருகிறார்...வராமலே பிரதமர், சோனியா என பலரும் வாழ்த்துச் சொல்லப் போகிறார்கள். உலகத் தலைவர்கள் எல்லோரும் உன்னிப்பாய்க் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்; உலகத்தின் முதல் செம்மொழித் தமிழ் மாநாடு, சர்வதேசங்களுக்கு என்ன செய்தியை சொல்லப் போகிறதென்று.தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்ததற்காக மத்திய அரசுக்கு இந்த மாநாட்டில் நன்றி சொல்லலாம். தமிழ் மொழி வளர்ச்சிக்காக, ஆராய்ச்சிக்காக சிறப்பு நிதியை ஒதுக்குமாறு நிதியமைச்சரிடம் வேண்டுகோள் வைக்கலாம். ஏற்கனவே, மத்திய அரசிடம் வைத்துள்ள பல கோரிக்கைகளை மீண்டும் நினைவு படுத்தலாம்.இவையெல்லாம் நிகழும் என்பது பலரது கணிப்பு. இவற்றையும் தாண்டி, தமிழின் நலன் காக்க, தமிழனின் தன்மானம் காக்க, அழுத்தமாய் சில கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தி, வரலாற்றுப் பதிவு செய்வார் என்பது முதல்வர் கருணாநிதியின் மீது நம்பிக்கை வைத்துள்ள தமிழர்களின் எதிர்பார்ப்பு.தமிழகத்துக்குள் தமிழை வளர்க்க இந்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளிலேயே, பல திருத்தம் செய்ய வேண்டுமென்று பலருக்கு வருத்தம் இருக்கிறது. வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஏற்பட்டு வரும் இன்னல்களை துடைத்தெறிய வேண்டிய பொறுப்பும், அதிகாரமும் மத்திய அரசிடம்தான் உள்ளது.அதை உலக அரங்கிற்கு முன்னால், பகிரங்கமாக வலியுறுத்தும் வாய்ப்பை தமிழக அரசுக்கு செம்மொழி மாநாடு வழங்கியுள்ளது. மொழியை மட்டுமின்றி, அந்த மொழி பேசுகிற இனத்தையும் காக்க வேண்டிய கடமையை, கருணாநிதி எப்படி நிறைவேற்றப் போகிறார் என்பதில்தான் இருக்கிறது இந்த மாநாடுக்கான வரவேற்பும், எதிர்ப்பும்.


மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »