E-paper   |   Sitemap   |   RSS
ஜூன் 16,2010,00:00

அடுத்த வாரம் இதே கிழமையில் அமர்க்களமாய் ஆரம்பமாகி விடும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு. ஜனாதிபதி, முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் எல்லோரும் கோவையில் குழுமியிருப்பார்கள். மாநிலம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், குழந்தைகளும் குதூகலமாயிருப்பார்கள்.சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாடு நிகழும்போது, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு மகிழ்வாகவோ, வருத்தமாகவோ செம்மொழி மாநாடு நிகழ்வுகள் மீதே நினைவுகள் படிந்திருக்கும். இவ்வேளையில், மாநாட்டில் நேரடியாக பங்கேற்கும் பாக்கியம் பெற்ற கோவை மக்கள் என்ன செய்யப்போகிறார்கள்?.இந்த கேள்வி, எல்லோரது மனதிலும் எழுவதைத் தவிர்க்கவே முடியாது. மாநாடு நடத்தும் நோக்கம், சூழல், எதிர்பார்ப்புகளைத் தாண்டி, மாநாட்டின் நிகழ்வுகளை, கண்காட்சியை, அலங்கார ஊர்தியைப் பார்க்க வேண்டுமென்கிற ஆசையும், ஆர்வமும் கொங்கு மண்டல மக்களிடம் நிறையவே இருக்கிறது. ஆனால்...அதை விட கெடுபிடிகள் குறித்த அச்சமும் அதிகம் இருக்கிறது. அவிநாசி சாலையில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்றால் எப்படிச் செல்வது, வாகனத்தை நிறுத்த முடியுமா, காவல்துறை கெடுபிடி இருக்குமா, கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்வோமா என்றெல்லாம் பலவிதமாய் பயம் கிளம்பியிருக்கிறது.இந்த ஐயத்தைப் போக்கி, உள்ளூர் மக்கள் அனைவரும், 'இது எங்க ஊர்த் திருவிழா' என்கிற மகிழ்வோடு இந்த நிகழ்வுகளில் பங்கேற்கும் தைரியத்தைத் தர வேண்டிய பொறுப்பு, அரசுக்கு இருக்கிறது. பாதுகாப்பு என்ற பெயரில், கெடுபிடிகளை தீவிரப் படுத்தினால், மாநாட்டில் மந்திரிகள் இருப்பார்கள்; மக்கள் இருக்க மாட்டார்கள்.


மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »