E-paper   |   Sitemap   |   RSS
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ச.மெய்யப்பனார்
ஜூன் 15,2010,00:00

மணிவாசகர் பதிப்பகத்தின் மூலம் மிகச் சிறந்த ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டவர் ச.மெய்யப்பனார் (1933 - 2004). இவர் தமிழுக்கு ஆற்றிய பணிகளை இலக்கியப் பணி, பதிப்புப் பணி என இரு வகையாக பிரிக்கலாம். மெய்யப்பனார் அவர்கள் தாகூர், கபிலர், தில்லைத் திருக்கோயில், அறிவியல் சூடி, மதுரை மீனாட்சி போன்ற பல புத்தகங்களை எழுதியுள்ளார். ஆராய்ச்சி நூல்களை வெளியிட வேண்டும் என்றும், இனிய புத்தகங்கள் மக்களிடம் பரவ வேண்டும் என்றும், நல்ல நோக்கத்துடன் 1961ம் ஆண்டு 'மணிவாசகர் பதிப்பகம்' என்னும் பெயரில் ஒரு பதிப்பகத்தை நிறுவி அரிய இலக்கியப் புத்தகங்களை வெளியிட்டார். இவருடைய பிழையற்ற பதிப்புகளைக் கண்ட மாணிக்கனார் அவர்கள் மெய்யப்பனாருக்கு 'பதிப்புச் செம்மல்' என்னும் பட்டம் வழங்கிப் பாராட்டினார்.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »