E-paper   |   Sitemap   |   RSS
ஜூன் 14,2010,00:00

கோவையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 'தமிழ் நேயம்' அமைப்பு, 'செம்மொழி மாநாட்டில் நாம் எதிர்பார்ப்பது என்ன' என்ற தலைப்பில், தமிழியல் ஆய்வை மேம்படுத்தும் நோக்கில் சில கோரிக்கைகளை முன் வைக்கிறது. அதில், கவனிக்கப்பட வேண்டிய பல செய்திகள் இருக்கின்றன. தமிழில் கலைக்களஞ்சியம் வெளியிட வேண்டும். டில்லி, மராட்டியம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் தமிழ்க்கல்வியை வளர்க்க, தமிழக அரசு உதவ வேண்டும். மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் தமிழ்ப்பள்ளிகள் வேகமாக மூடப்படுவதைத் தடுக்க, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மலேசியாவில் தமிழுக்கு மாற்றாக இந்தியைக் கற்பிக்க முயற்சி நடக்கிறது. இவற்றைக் களைய உருப்படியான திட்டம் தேவை.ஆலயங்களில் தமிழ் அர்ச்சனைக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். தலைமைச் செயலகத்தில் அனைத்துத் துறை அறிவிப்புகளும், அரசாணைகளும் தமிழில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். பாடமொழியாகத் தமிழைக் கொண்டு வர ஏற்படும் சட்டச்சிக்கல்களை எதிர்கொள்ள சட்ட வல்லுனர் குழுவை அமைக்க வேண்டும்.பொறியியல் கல்வியை தமிழில் கொண்டு வர முயற்சிப்பதோடு, தமிழில் படித்தோர்க்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளும் தமிழில் இருக்க வேண்டும் என்ற சட்டத்தை உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.சாகித்ய அகாதமி தென் மண்டலத் தலைமை அலுவலகத்தை மீண்டும் சென்னைக்குக் கொண்டு வர முயற்சி எடுக்க வேண்டும்...இப்படித் தொடர்கிறது அந்த அறிக்கை. எதிர்ப்புக்குரிய கோரிக்கைகள் இருக்கட்டும்; தமிழைக் காக்க இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முயற்சிப்பது, செம்மொழி மாநாட்டுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும்.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »