E-paper   |   Sitemap   |   RSS
தமிழ் வளர்த்த அறிஞர்கள்...சுப்பிரமணிய முதலியார்
ஜூன் 14,2010,00:00

'வெண்பாவிற் புகழேந்தி' என்பது தான் பல நூற்றாண்டுகளாகத் தமிழர் கண்ட கவியின்பமாக, கவித்துவ உண்மையாக இருந்து வந்தது. தமிழ்ச்செம்மல் வெ.ப.சுப்பிரமணிய முதலியார் (1857 - 1946) 'அகலிகை வெண்பா' எனும் நூலை வெளியிட்ட போது, தமிழர் காலங்காலமாகக் கொண்டிருந்த கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தமிழ் மக்கள் மட்டுமல்லாது, தமிழறிஞர்களும் முதலியாரைப் பாராட்டினர். 1937 ஆம் ஆண்டு முதலியார் எண்பது வயது நிறைவு பெற்ற போது, திருநெல்வேலியில் தமிழ் மக்கள் விழாவெடுத்துச் சிறப்பாகக் கொண்டாடி, முதலியாரின் தமிழ்த் தொண்டைப் போற்றிப் பாராட்டினர். 'அகலிகை வெண்பா', 'நெல்லைச் சிலேடை வெண்பா', 'அம்பலவான தேசிக மாலை', 'தனிக்கவித் திரட்டு' போன்ற நூல்கள் இவரின் கவியாற்றலைப் புலப்படுத்தின.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »