E-paper   |   Sitemap   |   RSS
ஜூன் 12,2010,00:00

உலகத்தமிழ் மாநாடுகளின் பட்டியலில் கோவை மாநாடுக்கு இடம் கிடைக்காமல் போகலாம். ஆனால், தமிழுக்கு செம்மொழியாக அங்கீகாரம் பெற்றதற்குப் பின், நடத்தப்படுகிற முதல் உலகளாவிய தமிழ் மாநாடு என்ற வகையில், இந்த மாநாடுக்கு என்று சரித்திரத்தில் தனியிடம் இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. தமிழுக்குக் கிடைத்த பெருமையைக் கொண்டாடும் இதே வேளையில், தமிழை பன்முகத்தளங்களில் வளர்த்தெடுக்க வேண்டிய மாபெரும் பொறுப்பும் இந்த அரசின் வசம் உள்ளது. அந்த பொறுப்பை நிறைவேற்றுவதற்கான செயல் திட்டத்தின் துவக்க நிகழ்வாக, இந்த மாநாடு அமைய வேண்டும். முதல்வர் கருணாநிதியின் தமிழ்ப்பற்றும், தமிழறிவும் அளவிடற்கரியது. தமிழறிவு என்பது இயற்கை தருகின்ற வரம் என்று வைத்துக்கொண்டாலும், தமிழ்ப் பற்று என்பது அவர் சார்ந்த இயக்கம் வளர்த்து விட்ட பெருந்தீ. சமூகரீதியாக தமிழின் பயன்பாட்டை அதிகப்படுத்தி, பலப்படுத்துவதற்கு முன்பாக, அரசியல்ரீதியாக தமிழ்ப்பற்றையும், பயன்பாட்டையும் ஆழப்படுத்த வேண்டிய அவசியம், இப்போது இருக்கிறது. தமிழ் வளர்ப்புக்கான தொலை நோக்குத் திட்டங்களை இந்த மாநாட்டில் எதிர்பார்க்கின்றனர், தமிழ் ஆர்வலர்கள்.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »