E-paper   |   Sitemap   |   RSS
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பத்மநாபய்யர்
ஜூன் 12,2010,00:00

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் ராமசசாமி ஐயருக்கும், சேசஷம்மாளுக்கும் மகனாய் பிறந்து வளர்ந்தவர் பத்மநாபய்யர்(1899 - 1963). தமிழையும், சவுராஷ்டிரத்தையும் தமது இரு கண்களாகப் பாவித்துப் போற்றியவர் இவர் என்றாலும், தமிழின் தொன்மையும், தன்மையும் அவரை- '' இனிமை பழைமை எழில் யாவும் கொண்ட தனிமொழி- தண்டமிழே!'' என உறுதியோடு கவர்ந்தது. விடுதலைப் போராட்டத்தில் மதுரையின் முன்னணித் தலைவர்களுள் ஒருவராக விளங்கிய பத்மநாபய்யர், மகாத்மா காந்தியின் அன்பிற்குரிய தொண்டராக திகழ்ந்தவர். உப்பு சத்தியாகிரகம் நடந்த போது, இவர் மூதறிஞர் ராஜாஜியுடன் வேதாரண்யத்தில் உப்புக்காய்ச்ச உடன் சென்றார். விடுதலைக்கு பின், தமது கருத்தையும், கவனத்தையும் மொழி மேம்பாட்டிற்கும், ஆன்மீக வளர்ச்சிக்கும், கீதா பிரசாரத்திற்கும் செலுத்தினார்.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »