E-paper   |   Sitemap   |   RSS
ஜூன் 11,2010,00:00

மாநாடு துவங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாக வந்து, மாநாட்டுப் பணிகளையும், அனைத்து ஏற்பாடுகளையும் ஆய்வு செய்ய திட்டமிட்டிருக்கிறார் முதல்வர் கருணாநிதி. அவருக்கு முன்பாக, கோவைக்கு வந்து பணிகளை தீவிரப்படுத்த முனைப்போடு இருக்கிறார் துணை முதல்வர் ஸ்டாலின். மாநாடு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, ஓயாது, தன் சொந்த விருப்பு வெறுப்புகளையும் ஒதுக்கி விட்டு ஓடிக்கொண்டிருக்கிறார் கலெக்டர் உமாநாத். ஆனாலும், எதனால், எப்படி தாமதம் என்பது தெரியவில்லை; இன்று வரையிலும் எக்கச்சக்கமான பணிகள் முடியாமல் இழுத்துக் கொண்டிருக்கின்றன. மாநாட்டுக்கான தற்காலிக கட்டமைப்புகளான மாநாட்டுப் பந்தல், கண்காட்சி அரங்கம், ஆய்வரங்கப் பணிகள் மட்டுமே, மாநாட்டுக்குள் முழுமையாக முடியும் என்று தெரிகிறது. மற்றவை, அரைகுறையாக முடிக்கப்படலாம் அல்லது அப்படியே விடப்படலாம். இந்த இரண்டைத் தவிர, வேறெந்த அதிசயமும் மாநாட்டுக்குள் நிகழ்வதற்கான வாய்ப்பு தெரியவில்லை. மாநாட்டுப் பணிகளில் இப்போது காட்டும் வேகத்தை, ஐந்து மாதங்களுக்கு முன்பே காண்பித்திருந்தால், ஒரு வேளை எல்லாப் பணிகளும் திட்டமிட்டபடி நன்றாக முடிக்கப்பட்டிருக்கலாம். இன்றளவும், கோவையில் வந்து தங்கி, பணியாற்றும் அக்கறையோ, ஆர்வமோ, முக்கிய பொறுப்பிலுள்ள அமைச்சர்களுக்கோ, அதிகாரிகளுக்கோ இல்லை. மாநாட்டுக்கு முந்தைய நாளில் வருவதற்கு இவர்கள் என்ன விருந்தினரா, வெளிநாட்டவரா என்று தெரியவில்லை. இனிமேல், இவர்கள் இங்கே வந்து தங்கினாலும், இரவோடு இரவாக எந்த மாயாஜாலமும் நிகழப்போவதில்லை. என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் முதல்வர்?



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »