E-paper   |   Sitemap   |   RSS
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... க.த.திருநாவுக்கரசு
ஜூன் 11,2010,00:00

திருக்குறள் கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பப் பெரும் முயற்சி மேற்கொண்ட தமிழறிஞர்களில் திருநாவுக்கரசும் (1931 - 1989) ஒருவர். இவர் டாக்டர் மு.வரதராசனாரின் படைப்பிலக்கியங்களை ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். திருநாவுக்கரசு வரலாறு, கல்வெட்டு, மொழியியல், சமூகவியல், மானிடவியல், தத்துவம் போன்ற அனைத்து துறைகளிலும் வியத்தகு புலமை பெற்றவர். இவர் திருக்குறள் நீதி இலக்கியம், திருக்குறளில் கற்பனைத் திறனும் நாடக நலனும், திருக்குறளும் இந்திய அற நூல்களும், ஒளி விளக்கு, சான்றோர் கண்ட திருவள்ளுவர், தமிழ் நிலவு, வாழ்வும் இலக்கியமும் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். மேலும் இவர் ஆங்கிலத்திலும் இரண்டு நூல்களை எழுதியுள்ளார். இவருக்கு சாகித்ய அகாடமி நிறுவனம் 'திருக்குறள் மணி' என்னும் பட்டம் வழங்கிப் பாராட்டியது. மேலும் இவர் எழுதிய திருக்குறள் நீதி இலக்கியம் என்னும் நூலுக்கு விருது வழங்கி பெருமை செய்தது.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »