E-paper   |   Sitemap   |   RSS
ஜூன் 10,2010,00:00

ஐக்கிய நாடுகள் அவையில் உறுப்பினராகவுள்ள ஓர் அமைப்பு செய்த ஆய்வின் படி, 21ம் நூற்றாண்டின் இறுதிக்குள் அழிபடும் மொழிகளில் இப்போது செவ்வியல் மொழியாக அங்கீகாரம் பெற்றிருக்கும் தமிழும் ஒன்றாயிருக்கும் என்று தகவல். தமிழை உண்மையாய் நேசிக்கிற தமிழர்களுக்கு இது ஓர் அதிர்ச்சிச் செய்தி.தமிழ் முற்றிலும் அழிவதென்றால், தமிழர்கள் எல்லோரும் வேற்றுமொழி பேசுகிற மக்களாக மாறியிருக்க வேண்டும். அதற்கான சாத்தியக் கூறுகளும் அதிகம் தென்படுகின்றன. தமிழைப் படிக்காத இந்தத்தலைமுறைக்கு தமிழ் இலக்கியங்கள் சொல்லும் வாழ்க்கை முறையும் தெரிவதில்லை; அதைப்படி வாழவும் பிடிப்பதில்லை.பள்ளிகள் முதல் அரசு இயந்திரங்கள் வரையிலும், ஆழமாக வேரூன்றிப் பரவி இருக்கிற ஆங்கில ஆதிக்கம், தமிழினத்துக்குள் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சைச் செலுத்திக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை. இதற்கான அடிப்படை, தமிழ் வழிக்கல்விக்கு ஏற்பட்டிருக்கும் அவலநிலைதான்.தமிழ் கூறும் நல்லுலகில், ஆங்கிலம் படித்தவன் அதிகாரம் செலுத்த, தமிழ் படித்தவன் தலை குனிந்து அடிமையாய் பணியாற்றும் சூழல். பள்ளிக் கல்வியைத் தாண்டி விட்டால், மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் என எந்தக் கல்வியிலும் தமிழுக்கு எள்ளளவும் இடமில்லை. 'வாய் நிறைய ஆங்கிலம், கை நிறைய சம்பளம்' என்பதுதான் இன்றைய தமிழ்ச் சமுதாயம் கற்றுக்கொண்டிருக்கிற பாடம். இப்படியொரு சூழலில், இந்த செம்மொழி மாநாடு, தமிழை எந்த விதத்தில் தாங்கிப் பிடிக்கப் போகிறது என்று உலகம் முழுவதும் இருக்கிற உண்மையான தமிழர்கள் உன்னிப்பாய்ப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.


மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »