E-paper   |   Sitemap   |   RSS
தமிழ் வளர்த்த அறிஞர்கள்...ரா.இளங்குமரனார்
ஜூன் 09,2010,00:00

சங்க இலக்கியங்களில் தங்களது மனதை பறிகொடுத்த தமிழ் அறிஞர்களில் இளங்குமரனாரும் (1930) ஒருவர். இவரின் தமிழ்ப் பணிகளுள் தலைமையானது திருக்குறளின் சிறப்பையும், திருவள்ளுவரின் பெருமையையும் மக்களுக்கு எடுத்துரைக்க பெரும் பொருட்செலவில் 'திருவள்ளுவர் தவச் சாலை' என்னும் ஓர் அற நிலையத்தை ஏற்படுத்தி அறிவுரையூட்டி வருகிறார். இளங்குமரனார், அன்பும் அறிவும், முப்பெரும் புலவர்கள், புறநானூற்றுக் கதைகள், திருக்குறள் கட்டுரைகள், உரையாசிரியர்கள் கண்ட சொற்பொருள் நுண்ணம் விளக்கம், தனிப்பாடல் இன்சுவைத் திரட்டு, சங்கச் சான்றோர் அருளுரை போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். இவருடைய தமிழ்ப்பணியைப் பாராட்டி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1980ம் ஆண்டு 'கழக இலக்கியச் செம்மல்' என்னும் பட்டம் வழங்கிப் பாராட்டியது.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »