E-paper   |   Sitemap   |   RSS
ஜூன் 08,2010,00:00

செம்மொழி மாநாடு நெருங்க, நெருங்க அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தமிழின் மீதான பற்றும், பாசமும் பொங்கி வழிந்து வருகிறது. தமிழில் பெயர்ப் பலகை வைக்காவிட்டால் அபராதம் விதிக்கிறார்கள்; ரயில்வே துறையில் தமிழில் தேர்வு எழுத அனுமதிக்கிறார்கள்; உடன் பிறப்புகள் தூய தமிழில் உரையாற்றுகிறார்கள்.மாநாடுக்குப் பின், இந்த பாசம் கரைந்து போகும் என்பது எதிர்பார்ப்பு. அப்படி இல்லாமலிருந்தால் மகிழ்ச்சி. தமிழ் வளர்ச்சித்துறை என்ற ஒரு துறையை உருவாக்கிய அரசு, அதற்கான அதிகாரங்களையும், பணிகளையும் சரியாக வரையறுக்கவில்லை. போட்டிகளை நடத்தி, பரிசு கொடுப்பதால் மட்டும் தமிழ் வளர்ந்து விடாது.தமிழில் பெயர் வைத்தால் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி ரத்து தருகிறது அரசு. போக்கிரி, அயன், சிவாஜி, தெனாவட்டு, மதுர, பையா, எந்திரன்...இவையெல்லாம் தமிழ்ப் பெயர்கள் என்று பல லட்ச ரூபாய் வரியிலிருந்து விலக்கு தரப்பட்டுள்ளது.இந்த பெயர்களால் தமிழ் எங்கே எப்படி வளர்ந்ததென்று தெரியவில்லை. இதனால், பயன் பெறுவது கோடிகளில் புரளும் திரைத்துறையினர். வரி விலக்கு அளிப்பதை அரசு நிறுத்தினால், தமிழ் திரைத்துறையினரின் தமிழ்ப்பற்றும் விலக்கிக் கொள்ளப்படும். இது தேவையற்றது என்பது தமிழ் ஆர்வலர்களின் ஒட்டு மொத்தக் கருத்து.இதற்குப் பதிலாக, கேளிக்கை வரியிலிருந்து வரும் வருவாயின் ஒரு பகுதியை, தமிழ் வளர்ச்சிக்குப் பயன் படுத்தலாம். தமிழில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவ, மாணவியருக்கு பரிசளிக்கலாம்; தமிழ்ப் பட்டதாரிகளுக்கு புதிய வேலை வாய்ப்பை உருவாக்கலாம். அரசு யோசித்தால் இன்னும் ஆயிரமாயிரம் செய்யலாம்.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »