E-paper   |   Sitemap   |   RSS
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ச.வே. சுப்பிரமணியனார்
ஜூன் 08,2010,00:00

தமிழ் வளர்ச்சிக்காக தமிழிலே ஆய்வு நூல்கள் பல எழுதி அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டு புரிந்தவர் ச.வே. சுப்பிரமணியனார்(1929). இவர் சிலப்பதிகார நூலை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல் இயக்குனர் இவரே. சுப்பிரமணியனார் கேரளப் பல்கலைகழகத்தின் முதன் முதலில் டாக்டர் பட்டம் பெற்றவர். தமிழ் இலக்கியங்களின் பெருமையை தரணி அறிய வேண்டும் என்பதற்காக தமிழ் பதிப்பகம் என்னும் பெயரில் புத்தக வெளியீட்டு நிறுவனத்தை சுப்பிரமணியனார் துவக்கினார். மேலும் இவர் சிலம்புச் செல்வி, தமிழர் வாழ்வில் தாவரம், தமிழில் விடுகதைகள், அடியார்க்கு நல்லார் உரைதிறன், திராவிட மொழி இயக்கியங்கள், தமிழ் இலக்கிய வரலாறு போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »