E-paper   |   Sitemap   |   RSS
ஜூன் 07,2010,00:00

தமிழுக்கு விழா எடுத்து அழகு பார்க்கும் தமிழக முதல்வர், நெடுநாட்களாக பள்ளி, கல்லூரி, பல்கலை மற்றும் பொது விழாக்களில் தமிழ்த்தாய், தேசிய கீதம் படும் அவஸ்தைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சில பள்ளிகளில் மட்டும் மாணவர்கள், தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதத்தை வாய் விட்டு பாடுகின்றனர். ஆனால், பெரும்பாலான மெட்ரிக் பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் பெயரளவுக்கு கூட யாரும் வாய் திறப்பதில்லை. தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் மைக்செட் உபயத்தால் நடக்கிறது. இப்பாடல்கள் அடங்கிய காசெட் அல்லது 'சிடி' தகராறு செய்யும்போதோ, பாடலின் இடையே திடீரென மின்வெட்டு ஏற்பட்டு விடும்போதோ, தமிழ்ப்பற்றும் தேசிய உணர்வும் பொங்க பெருமிதத்துடன் பாட வேண்டிய இப்பாடல்கள், பெருத்த அவமானத்துக்கு உள்ளாக்கப்படுகின்றன. அரசு விழாக்கள், தமிழ் செம்மொழி மாநாட்டின் அனைத்து நிகழ்வுகள், பள்ளி, கல்லூரி, பல்கலை விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து,தேசிய கீதம் பாடல்களை மைக் செட்டில் இசைப்பதற்கு பதிலாக வாய்விட்டு பாட வேண்டும்.


மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »