E-paper   |   Sitemap   |   RSS
மார்ச் 22,2010,00:00

உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு கோவை வரும் விருந்தினர்களை வரவேற்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வழிகாட்டவும், பாரதியார் பல்கலை, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் அடங்கிய 1,000 பேர் கொண்ட குழு தயாராக உள்ளது.

இதற்காக கோவை பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளில் படிக்கும் முதுகலை மாணவர்கள், ஆசிரியர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இது பற்றி பாரதியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் கூறுகை யில்,''மாநாட்டுப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஒரு கல்லூரிக்கு 25 மாணவர்கள், ஐந்து ஆசிரியர்கள் என மொத்தம் 30 குழுக்கள் கொண்ட 1,000 பேர் தயாராக உள்ளனர். மாநாட்டு விருந்தினர்கள் கோவை வந்திறங்குவது முதல் மீண்டும் புறப்பட்டு செல்வது வரை, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வர்.'
'மாநாடு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள பல்வேறு குழுக்களில், தேவைப்படும் குழுவுடன் இணைந்து பணிபுரிய, அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு விருந்தினர்கள், பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்படவுள்ளனர். ''மீதமுள்ள விருந்தினர்களை, கல்லூரிகள், பல்கலை விடுதிகளில் தங்க வைப்பதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மாணவ, மாணவியர் சார்பில் மாநாட்டில் அலங்கார வண்டிகள் அடங்கிய பேரணி நடத்தப்படவுள்ளது. பேரணிக்கான தலைப்புகளை தேர்வு செய்து முதல்வரின் பார்வைக்கு அனுப்பியுள்ளோம். அவரது ஒப்புதலுக்குப் பின் இறுதி செய்யப்படும்,'' என்றார்.


மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »