E-paper   |   Sitemap   |   RSS
ஜூன் 06,2010,00:00

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அலங்கார வளைவுகள், வண்ண ஓவியங்கள், தமிழ் கலாச்சாரங்களை விளக்கும் அலங்கார ஊர்திகள், கலைக் குழுவினரின் நடன, நாட்டியங்கள் முதல் நாளன்று இடம் பெறுகிறது.பல வித்தியாசமான நிகழ்வுகள் இடம் பெறும் வேளையில், உணவுக்கும் பஞ்சமில்லை. பல்வேறு விதமான உணவுகளை தயாரித்து வழங்க பல தனியார் உணவு நிறுவனங்களும் தயாராக உள்ளன.மாநாடு நடக்கும் 5 நாட்களும், செம்மொழி மாநாட்டு உணவுத் திருவிழா என்ற பெயரில், கோவை மத்திய சிறை வளாகத்திலும், திருச்சி ரோடு வெங்கிடலட்சுமி திருமண மண்டபம், காமராஜ்ரோடு என்.ஜி.,ராமசாமி பள்ளி அருகில், விமானநிலையத்தில் இருந்து காளப்பட்டி செல்லும் ரோடு, அவிநாசிரோடு நேஷனல் மாடல் பள்ளி அருகில் உணவுத் திருவிழா நடைபெறும். இங்கு மாநாடு நடக்கும் நாட்களில் வெவ்வேறு விதமான உணவு வகைகள் தயாரித்து பரிமாறப்படும். மாநாட்டில் பங்கேற்போருக்காக சின்னியம்பாளையத்தில் உள்ள ராமலட்சுமி திருமணமண்டபம், ஏ.பி.,திருமண மண்டபம், டி.ஏ.ஆர்., கதிரவன், வி.கே.ஆர்., அகிலாண்டேஸ்வரி, ஜி.வி.பி., காமாட்சியம்மன், என்.ஆர்., பத்மாவதி திருமண மண்டபங்களில் உணவு தயாரிக்கப்பட்டு மாநாட்டு வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பரிமாறப்படும். மாநாட்டிற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக அனைத்து திருமண மண்டபங்களிலும் பணிகள் துவங்கப்படும்.


மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »