E-paper   |   Sitemap   |   RSS
தமிழ் வளர்த்த அறிஞர்கள் ... : கல்கி
ஜூன் 06,2010,00:00

1899 ஆம் ஆண்டு, தஞ்சாவூர் மாவட்டம், புத்தமங்கலம் பகுதியை சேர்ந்த ராமசாமி ஐயர் - தையல் நாயகி தம்பதியருக்கு மகனாக பிறந்தார் கல்கி கிருஷ்ணமூர்த்தி (1899 - 1954). தேசபக்தர், தியாகச் செம்மல், பத்திரிகையாளர், நூலாசிரியர், திறனாய்வாளர், பல்கலை வித்தகர், பண்பாட்டுக் காவலர், பேனா மன்னர் என பல பெயர்கள் பெற்றவர் 'கல்கி கிருஷ்ணமூர்த்தி'. 'அகத்தியர்', 'தமிழ்த்தேனி', 'இரா.கி', 'கர்நாடகம்', 'லாங்கூலன்', 'குகன்' என பல்வேறு புனைப்பெயர்கள் கொண்டு, பேராசிரியர் கல்கி எழுதிக் குவித்த இலக்கிய நூல்கள் அதிகம். 1941 ஆம் ஆண்டு, 'பார்த்திபன் கனவு' என்ற சரித்திர நாவலை எழுதி தமிழ் மொழியில் வரலாற்றுப் புதினங்கள் இல்லை என்ற குறையை போக்கினார்.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »