E-paper   |   Sitemap   |   RSS
ஜூன் 05,2010,00:00

கோவை நகர வீதிகளில் மின்னும் வண்ண விளக்கொளி, சாவகாசமாக நடந்து செல்ல நடைபாதை, குறுகலாக இருந்த ரோடுகள் அகலமாகி விட்ட அழகு, போக்குவரத்து தானியங்கி சிக்னல் தோறும் சிறப்பு வசதிகள் என கோவை நகர் பிரகாசமாகி உள்ளது. செம்மொழிமாநாடு காண பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மாநாட்டுக்கு வருகை தரவுள்ளனர். இவர்களுடன் முதல்வர், அமைச்சர்களும் ஒரே நேரத்தில் நகரத்தில் தங்கி செல்ல வேண்டியதிருப்பதால் அவர்கள் மாநாட்டை கண்டு களித்து பத்திரமாக திரும்பி செல்வது வரை பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய முக்கியப் பொறுப்பு காவல் துறையினருக்கு உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளில் சிறு நெகிழ்வு ஏற்பட்டாலும் உலக அரங்கில் பேசப்படுவதாக அமைந்து விடும். இதனால் மாநாட்டை துவக்கி வைக்க கோவை வருகை தரும் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகையையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகளில் அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர். அரசு தலைமைச் செயலர் ஸ்ரீபதியின் தலைமையில் நேற்று கோவையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், காவல் துறை உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். ஜனாதிபதியின் வருகையின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »