E-paper   |   Sitemap   |   RSS
ஜூன் 04,2010,00:00

கோவையில் உலகத் தமிழ் மாநாடு என்று கடந்த ஆண்டில் முதல்வர் கருணாநிதி அறிவித்தபோது, உலகம் முழுவதிலும் இருந்த தமிழர்களிடம் ஓர் 'இனம் புரிந்த சோகம்' நிழலாடிக் கொண்டிருந்தது. இந்த மாநாட்டை அவசர கதியில் நடத்துவதற்கான காரணம் குறித்தும், பல விதமான கேள்விகள் கிளம்பின. எல்லா விமர்சனங்களையும் புறந்தள்ளி விட்டு, தமிழ் மீதான தன் காதலை உறுதிப்படுத்தும் விதமாக, செம்மொழி மாநாட்டுப் பணிகளில் தீவிரம் காட்டினார் முதல்வர். அவரது இனப்பற்றைப் பற்றி சந்தேகம் எழுப்பியவர்கள் கூட, அவரது தமிழ்ப் பற்றை விமர்சிக்க இயலாதவாறு, பணிகளைத் தொடர்ந்தார். இதோ! உலகம் முழுவதிலும் இருந்தும் கோவையில் வந்து குவியப் போகின்றனர் தமிழறிஞர்களும், பேராளர்களும். மாநாடு நெருங்கி வரும் சூழலில், சில செய்திகளை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம், முதல்வருக்கு இருக்கிறது. இந்த மாநாடு, தனி நபர் துதிபாடும் இன்னொரு வைபவமாக மாறி விடக்கூடாது. தமிழுக்கு மட்டுமே புகழ் மகுடம் சூட்டுகிற விழாவாக இருக்க வேண்டும். தமிழ் வழிக்கல்வி, தமிழ் நூல்களை பிற மொழிகளில் மொழி பெயர்த்தல், வெளி நாடுகள் மற்றும் வெளி மாநில பல்கலைகளில் தமிழைப் பாடமாகச் சேர்ப்பது, தமிழ் பயின்றோருக்கு பணிகளில் முன்னுரிமை அளிப்பது உள்ளிட்ட தமிழ் பாதுகாப்புக்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படவேண்டும். அந்த தீர்மானங்களை முயற்சிகளாக்கி, அந்த முயற்சிகளில் வெற்றி கண்டு, அந்த வெற்றிகளை சரித்திரமாக்க வேண்டும். அந்த சாமர்த்தியம், நம் முதல்வருக்கு நிறையவே இருக்கிறது; சாதிப்பார் என்றே நம்புகிறார்கள் தமிழர்கள்.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »