E-paper   |   Sitemap   |   RSS
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ரா.சசாரங்கபாணியார்
ஜூன் 04,2010,00:00

சங்கப் பாடல்களில் ஏறத்தாழ 40 ஆண்டுகள் தம் உள்ளத்தை பறிகொடுத்து, சங்க கால புலவரைப் போலவே நம் காலத்திலும் வாழ்ந்து வருபவர் முனைவர் ரா.சசாரங்கபாணியார் (1925). திருக்குறள் மற்றும் சங்க இலக்கியங்கள் இவருடைய நெஞ்சினை மிகவும் கவர்ந்த இலக்கியங்கள். இவர் குறள் விருந்து, இயற்கை விருந்து, திருக்குறள் உரையாசிரியர்கள், சங்கச் சான்றோர்கள், புறநானூற்றுப் பிழிவு, பரிபாடல் திறன், சங்கத் தமிழ் வளம், மாணிக்கச் செம்மல் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். மேலும் இவர் ஆங்கிலத்திலும் இரண்டு நூல்களை எழுதியுள்ளார். குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் பறம்பு மலையில் கொண்டாடிய கபிலர் விழாவில் 1981ம் ஆண்டு இவருக்கு 'பெரும்புலவர்' என்ற பட்டமும், கபிலர் தங்கப் பதக்கமும் வழங்கிப் பாராட்டியது. 'பரிபாடல் திறன்' என்னும் ஆய்வு நூல், இவருக்கு தமிழக அரசின் சிறப்பு பரிசினை பெற்றுத் தந்தது.




மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »