E-paper   |   Sitemap   |   RSS
ஜூன் 03,2010,00:00

கோவை மாநகரம், விரைவில் பெருநகரமாகவுள்ளது. இப்போது 106 சதுர கி.மீ., பரப்புள்ள கோவை, 500 சதுர கி.மீ., பரப்புள்ள 'மகா நகரமாக' மாறப்போகிறது. இருக்கின்ற நகரத்துக்கே பாதாள சாக்கடை, இணைப்புச்சாலை, மழைநீர் வடிகால், பாலங்கள் முழுதாகக் கிடைத்தபாடில்லை.ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்டமும் கிடைக்காதிருந்தால், இன்னும் ஓரிரு ஆண்டுகளிலேயே குடிநீர் தட்டுப்பாடு தலை விரித்தாடியிருக்கும். சாலையெல்லாம் சாக்கடை சங்கமமாயிருக்கும். அந்த திட்டம் கிடைத்தது; செம்மொழி மாநாடும் சேர்ந்து கொள்ள, கோவை கொஞ்சம் பொலிவாயிருக்கிறது. இதே வளர்ச்சியும், கவனிப்பும் சுற்றிலும் உள்ள நகரங்களுக்கும் கிடைத்தாக வேண்டும். அப்போதுதான், எதிர்காலத்தில் கோவை நகரில் சமூக சமநிலை பேணப்படும்; தொழில் வளர்ச்சியிலும் பிற மாநில, பிற நாட்டு நகரங்களுடன் கோவை போட்டி போட்டு, தமிழ்நாடுக்கு பெருமை சேர்க்க முடியும்.தமிழர்கள், மலையாளிகள், கர்நாடகத்தைப் பூர்வீகமாகக் கொண்டோர், தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டோர், வட மாநிலத்தவர் எல்லோரும் சேர்ந்து தமிழ் பேசுகிற சமத்துவபுரமாக கோவை திகழ்கிறது. எனவே, இந்த நகருக்காக முதல்வர் அறிவிக்கும் எந்த திட்டமும், இந்தியர் எல்லோருக்குமே மகிழ்ச்சி தருவதாய் அமையும்.


மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »