வாய்மை பேசுவதையே தம் வாழ்வின் குறிக்கோளாய்க் கொண்டு உயர்ந்தவர் வ.சுப.மாணிக்கனார் (1917 - 1989). எளிய குடும்பத்தில் பிறந்து பின்னாளில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக உயர்ந்தவர். இவர், மனைவியின் உரிமை, நெல்லிக்கனி, உப்பங்கழி, ஒரு நொடியில் ஆகிய நாடகங்களை எழுதியுள்ளார். மேலும் இவர் தொல்காப்பியக் கடல், திருக்குறட் சுடர், சசங்க நெறி, காப்பியப் பார்வை, இலக்கியச் சசாறு, வள்ளுவம், கம்பம், தமிழ்க் காதல் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். மாணிக்கனார் தமிழின் பெருமையை விளக்கும் நான்கு ஆங்கில நூலையும் எழுதியுள்ளார். இவரிடம் உள்ள மிகப்பெரிய வன்மை என்னவெனின் எதையும் ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடன் காண்பது. மேலைச் சிவபுரி சசன்மார்க்க சசபை இவருக்கு 'செசம்மல்' என்னும் பட்டம் வழங்கி சிறப்பித்தது. மாணிக்கனாரின் மறைவுக்கு பிறகு தமிழக அரசு இவருக்கு 'வள்ளுவர்' விருது வழங்கிப் போற்றியது.
- மாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய "அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.'
(745)
- கோவையில் துவங்கியது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு!
(419)
- தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி? மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு
(236)
- உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - ஒரு கண்ணோட்டம்
(196)
- தமிழகத்துக்கு என் இதயத்தில் தனியிடம்: பிரதிபா பாட்டீல்
(142)