E-paper   |   Sitemap   |   RSS
ஜூன் 02,2010,00:00

செம்மொழி மாநாட்டுக்காக அரசு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றினாலும், மக்களிடம் பெரிய மலர்ச்சியைப் பார்க்க முடியவில்லை. ஒரே ஓர் அறிவிப்பு, கோவை மக்களின் மனதையும், எதிர்காலத்தில் இந்த மண்ணையும் குளிர்விக்கப்போகிறது.இந்த மாநாட்டுக்காக ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு வனத்துறை மூலமாக முதல்வர் கருணாநிதி எடுத்துள்ள நடவடிக்கை, பாராட்டுக்கும், மகிழ்வுக்கும் உரியது. பாரதியார், அண்ணா பல்கலைக்கழகங்களுக்கு உட்பட்ட கல்லூரிகளிலும், வேளாண் பல்கலைப் பகுதியிலும் தலா 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.மரங்களை அதிகமாக வெட்டித் தள்ளிய தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறைகளுக்கு உட்பட்ட சாலைகள், கோவை மாநகராட்சி, 44 பேரூராட்சிகள், 229 கிராம ஊராட்சிகள், பள்ளிகள், தொழிற்சாலைகள், வேளாண் பல்கலை., ஆகிய பகுதிகளில் தலா 10 ஆயிரம் என ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்படவுள்ளன.இந்த மரக்கன்றுகளை வளர்ப்பது என்பது, வெறும் பேச்சளவில் முடிந்து விடாமல் முழுமையாக வளர்க்கப்பட மக்களின் ஒத்துழைப்பு அவசியம். வெயிலைச் சபிப்பதை விட, நிழல் தரும் ஒரு மரத்தை வளர்க்க உதவினால் இந்த மண்ணுக்கும், எதிர்கால சந்ததிக்கும் நல்லது.மரக்கன்றுகளை வளர்ப்பதில் ஓர் ஆரோக்கியமான போட்டியை உருவாக்க, ஒரு பரிசுத் திட்டத்தை அரசு அறிவிக்கலாம். இதுபற்றி ஆலோசிப்பதாக வனத்துறை அமைச்சர் செல்வராஜ் கூறியுள்ளார். முதல்வர் நினைத்தால் இன்னும் சிறப்பாக ஏதாவது அறிவிப்பார். ஆவலோடு காத்திருக்கிறார்கள் கோவை மக்கள்.


மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »