E-paper   |   Sitemap   |   RSS
தமிழ் வளர்த்த அறிஞர்கள்...ஞானசம்பந்தனார்
ஜூன் 02,2010,00:00

ஒரு நூலைத் திறனாய்வு செய்வதற்குரிய ஆழ்ந்த நுண்ணறிவும், பரந்த நூற்பயிற்சியும் பெற்றவர் அ.ச.ஞானசம்பந்தனார் (1916 - 2002). பச்சையப்பன் கல்லூரியில் திறனாய்வுக்கென முதன் முதலாக நியமிக்கப்பட்ட பேராசிரியர் இவர் தான். ஆன்மிகத் துறையில் பேரார்வம் கொண்ட இவர், கம்பராமாயணம், பெரியபுராணம், திருவாசகம் ஆகிய நூல்களில் ஆழ்ந்த புலமையுடையராக விளங்கினார். இவர் ராவணன் மாட்சியும் வீழ்ச்சியும், இலக்கியக்கலை, நாடும் மன்னனும், தம்பியர் இருவர், அரசியல் மூவர், மகளிர் வளர்த்த தமிழ், குறள் கண்ட கனவு, நான் கண்ட பெரியவர்கள் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய 'கம்பன் புதிய பார்வை' என்னும் நூல் 'சாகித்ய அகாடமி' விருது பெற்றது. 1987ம் ஆண்டு தமிழக அரசு இவருடைய தமிழ்ப்பணியைப் பாராட்டி 'கலைமாமணி' விருது வழங்கி சிறப்பித்தது.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »