E-paper   |   Sitemap   |   RSS
ஜூன் 01,2010,00:00

செம்மொழி மாநாட்டின் புகழை பறை சாற்றும் வகையில் தமிழ் கலாச்சார கலை நிகழ்ச்சிகள் அடங்கிய ஊர்வலம் அமையும் என்று அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். அலங்கார ஊர்வலம் அணிவகுத்து செல்வதிலும், அதில் பங்கேற்கும் கலைஞர்களின் குறைகளை, களையும் வகையிலும், வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் அலங்கார அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்த தயாராகி வருகிறது செம்மொழி மாநாட்டு ஊர்வலக்குழு. செம்மொழி மாநாடு துவங்கும் ஜூன் 23ம் தேதிக்கு முன் ஒரு சில நாட்களுக்கு முன்பு, இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் செல்லும் அலங்கார ஊர்திகளில் 2 ஆயிரம் நடன, நாட்டிய கலைஞர்கள் தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நடனங்களையும், நாட்டியங்களையும் நடத்துகின்றனர். அலங்கார ஊர்திகளில் தமிழை பறைசாற்றிய திருவள்ளுவர், கண்ணகி, அய்யனார், கோப்பெரும்சோழன், நாச்சியார், பிசிராந்தையார், பாரி, பேகன் போன்றோரின் சிலைகள் இடம் பெறுகின்றன.ஒத்திகை, செம்மொழி மாநாடு அன்று நடத்தப்படும் நிகழ்ச்சி போன்றே, வ.உ.சி.,பூங்கா மைதானத்தில் துவங்கி, கொடிசியா கண்காட்சி வளாகத்திற்கு போய் சேரும்.இந்நிகழ்ச்சியுடன், போலீசார் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பணிகளுக்கான ஒத்திகையும் நடத்துகின்றனர். மற்ற துறையினர் அந்தந்த துறை சார்ந்த பணியின் ஒத்திகையை நடத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »