E-paper   |   Sitemap   |   RSS
தமிழ் வளர்த்த அறிஞர்கள்...ராமநாதன் செட்டியார்
ஜூன் 01,2010,00:00

தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பாடுபடுவதே தமது தலைமையான பணி என வாழ்ந்த அறிஞர் பெருமக்களுள் ராமநாதன் செட்டியாரும் (1915) ஒருவர். இவர் பணியாற்றிய அனைத்து துறைகளிலும் தனி முத்திரை பதித்தவர். எத்தகைய சிக்கல் வாய்ந்த பாடலைக் கூட எளிமையாக விளக்கும் தமிழ்ப்புலமை பெற்றவர். ஆய்வுக் கட்டுரைகளை மிகவும் எளிய நடையில் எழுதிப் பெரும் புகழ் பெற்றவர். ராமநாதன் செட்டியார் ஐந்து முறை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நிகழ்நிலைத் துணைவேந்தராகப் பணியாற்றியுள்ளார். இவர் பத்துப்பாட்டு வளம், நோக்கு, திருத்தக்கத் தேவர், வாழ்க்கை வளம், தொல்காப்பியச் செல்வம், அண்ணாமலை அரசர், சங்ககாலத் தமிழர் வாழ்வு ஆகிய நூல்களை எழுதியுள்ளார். ராமநாதன் செட்டியார் தமது வயது முதிர்ந்த வயதிலும் கூட தம்மால் இயன்ற பணிகளை தமிழுக்கு ஆற்றி வருகிறார்.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »