E-paper   |   Sitemap   |   RSS
மே 31,2010,00:00

செம்மொழி மாநாட்டிற்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வருகை தருவதாக அரசு கணக்கீடு கூறுகிறது. அதற்கேற்ப துப்புரவு பணி மேற்கொள்ள கோவை மாநகராட்சி நிர்வாகம் பணியாளர்களை நியமித்துள்ளது. மாநாட்டையொட்டி நாடு முழுவதிலுமிருந்து, சிறப்பு ரயில்கள் கோவைக்கு இயக்கப்படுகின்றன. கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு ஏராளமான பொதுமக்கள் வருகை தருவர். பொதுமக்களின் வருகைக்கு ஏற்றாற் போல் கோவை ரயில்வே ஸ்டேஷனில் இரவு பகலாக துப்புரவு பணி மேற்கொள்ள மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் 144 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். சுழற்சி முறையில் இரவு மற்றும் பகல் நேரங்களில் துப்புரவு பணி மேற்கொள்வர். கண்காணிப்பு பணியில் சுகாதார ஆய்வாளர்கள் ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இது தவிர, தீயணைப்புத்துறையினர், போலீசார் தங்கும் திருமண மண்டபங்கள், மாநகராட்சி பள்ளிக்கூடங்ளில் துப்புரவு பணி மேற்கொள்ள சுழற்சி முறையில் துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொடிசியா வளாகத்தில் அமைக்கப்படும் எட்டு நடமாடும் கழிப்பிடங்களில் துப்புரவு பணி மேற்கொள்ள துப்புரவு பணியாளர்கள் 100 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, 'கோவை மாநகரில் துப்புரவு பணி சரியாக நடைபெறுகிறதா' என்பதை கண்காணிக்க சுகாதார ஆய்வாளர்கள் 38 பேர் பணி மேற்கொள்ள உள்ளனர். கொடிசியா வளாகத்திலுள்ள உணவு தயாரிப்பு, உணவு பரிமாறுமிடம், குடிநீர் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வெளி மாவட்டங்களை சேர்ந்த சுகாதார ஆய்வாளர்கள் 25 பேர், மாநாட்டு பணிக்காக கோவை வர உள்ளனர்.


மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »