E-paper   |   Sitemap   |   RSS
தமிழ் வளர்த்த அறிஞர்கள்...சித்பவானந்தர்
மே 31,2010,00:00

அருந்தமிழ் அறிஞராக மட்டுமின்றி, தம் எழுத்தாற்றலாலும், உரையாற்றலாலும் நாட்டு மக்களுக்கு வழியை காட்டிய அருளாளராகவும் விளங்கிய பெருமைக்குரியவர் சித்பவானந்தர் . எழுநூறு சுலோகங்களிலான பகவத்கீதைக்கு எளிய தமிழில் இவர் இயற்றியுள்ள விளக்கவுரை அரியது. இந்நூல் திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்து வெளியீடாக 1951ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இது தவிர, சித்பவானந்தர் திருவாசசகத்திற்கு இயற்றியுள்ள விளக்கத் திருநூல், புதிய பார்வையையும், புதிய கருத்தையும் வலியுறுத்துவதாக உள்ளது. இவருடைய குருநாதர், சுவாமி சிவானந்தர் 1926ஆம் ஆண்டு சசந்நியாசச தீட்சைச அளித்து,'சுவாமி சித்பவானந்தா' எனும் பெயரை இவருக்கு சூட்டினார்.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »